செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 3 மார்ச் 2022 (19:48 IST)

உக்ரைன் மாணவர்களை மீட்க போலந்து செல்லும் தமிழக எம்பிக்கள்!

உக்ரைன் நாட்டின் மாணவர்களை மீட்க போலாந்து நாட்டிற்கு தமிழக எம்பிக்கள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி ருமேனியா போலந்து மற்றும் சுலோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழக எம்பிக்கள் செல்கின்றனர்
 
 திருச்சி சிவா கலாநிதி வீராசாமி எம்எம் அப்துல்லா மற்றும் எம்எல்ஏ டிஆர்பி ராஜா ஆகியோர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளதாகவும் மாணவர்களை மீட்க தமிழக அரசு இந்த பிரதிநிதிகளாக இவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன