1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (19:04 IST)

பாஜக ஆட்சினா என்ன பிரச்சனையே வராதா... எடப்பாடியாரா இப்படி பேசுறது??

கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துடன் நீர் பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். 
 
2020 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. இது 15வது சட்டப்பேரவையின் 8வது கூட்டத்தொடராகும். இன்று இரண்டாவது நாளாகவும் சட்டப்பேரவை கூடியது. இந்த இரண்டு நடகளும் திமுக எம்.எல்.ஏ-க்கள் குடியுரிமை சட்ட திருத்தத்தை காரணம் காட்டி வெளிநடப்பு செய்தனர். 
 
அதேபோல் இன்று கூடிய சட்டப்பேரவையில், கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துடன் நீர் பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சிக்கு வந்தாலும் மேகதாதுவை கையில் எடுக்கிறார்கள் என பேசியுள்ளார். 
 
கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட சில ஆண்டுகளாக தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு தமிழகத்தில் இருந்து பலமான எதிர்ப்பு எழுந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.