திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 13 மார்ச் 2023 (07:52 IST)

குறவன் - குறத்தி ஆட்டத்திற்கு தடை: தமிழக அரசு அரசாணை

dance1
குறவன் - குறத்தி ஆட்டத்திற்கு தடை: தமிழக அரசு அரசாணை
தமிழகத்தில் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 
தமிழகத்தில் உள்ள கோவில் திருவிழாக்களில் குறவன் குறத்தி ஆட்டம் நடைபெறும் என்பதும் இந்த ஆட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தது என்பதும் தெரிந்ததே. 
 
குறிப்பாக குறவன் குறத்தி ஆட்டம் நாளடைவில் ஆபாசம் ஆடப்படுவதாகவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் கோயில் திருவிழாக்களை நடத்தப்படும் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது. 
 
ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசமாக ஆடப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மார்ச் 10-ம் தேதி அரசாணை வெளியீடு 
 
 
Edited by Siva