1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 12 மார்ச் 2023 (13:41 IST)

ஆன்லைன் ரம்மிக்கு தடை: நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்க திமுக நோட்டிஸ்!

rummy
ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதிப்பது குறித்த மசோதா இயற்றப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் அந்த மசோதாவை கவர்னர் சமீபத்தில் திருப்பி அனுப்பினார். 
 
ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை மசோதாவை இயற்ற தமிழக அரசுக்கு உரிமை இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்க அனுமதி கோரி திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து திமுக எம்பி டிஆர் பாலு அவர்கள் நாடாளுமன்ற செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் 40க்கும் மேற்பட்டவர் ஆன்லைன் ரம்மியால் உயிர் இழந்துள்ளதால் என்றும் இது குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva