1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 ஜனவரி 2025 (08:56 IST)

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

அண்ணா பல்கலைக்கழக  மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து சென்னை ஐகோர்ட் அளித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த நிலையில், இது அரசியல் கட்சிகள் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் எஃப்ஐஆர் வெளியானது குறித்து, மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமனம் செய்த உத்தரவிட்டனர்.

மேலும், அரசு அனுமதியின்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிடப்பட்டது. இதனிடையே, போலீஸ் கமிஷனருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கைகள் என்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva