தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை, அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு,கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம், வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி இந்த கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது