வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2023 (20:38 IST)

சுகாதாரத்துறை அமைச்சரை பாராட்டிய நடிகர் பார்த்திபன்

தமிழில் பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தன் வலைதள பக்கத்தில், தன் ஆரோக்கியத்தை போலவே தமிழக மக்களின் ஆரோக்கியத்தையும் கண்ணும் கருத்துமாக பேணி காக்கும் மருத்துவம் மீறிய மன மகத்துவம் நிறைந்தவர். அவருக்கு என் மனப்பூர்வ நன்றி! என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், மக்களுக்குத் தேவையான பல்வேறு நடவடிக்கைகள் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,

, இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தன் வலைதள பக்கத்தில், தன் ஆரோக்கியத்தை போலவே தமிழக மக்களின் ஆரோக்கியத்தையும் கண்ணும் கருத்துமாக பேணி காக்கும் மருத்துவம் மீறிய மன மகத்துவம் நிறைந்தவர். அவருக்கு என் மனப்பூர்வ நன்றி! என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:

மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் திரு மா. சுப்ரமணியம் அவர்களுக்கு உயரிய நன்றி- உரிய நடவடிக்கைகள் உடனடியாக எடுத்தமைக்கு. தான் இணைந்திருக்கும் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,தான் மந்திரியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன் ஆரோக்கியத்தை போலவே தமிழக மக்களின் ஆரோக்கியத்தையும் கண்ணும் கருத்துமாக பேணி காக்கும் மருத்துவம் மீறிய மன மகத்துவம் நிறைந்தவர். அவருக்கு என் மனப்பூர்வ நன்றி!!!! என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  இயக்குனர் விக்ரமனின் மனைவியும் நடனக் கலைஞருமான ஜெயப்பிரியா தனியார் மருத்துவமனையில் முதுகில் செய்த தவறான அறுவைச் சிகிச்சையால் பாதிக்கப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக கால்களை அசைக்க முடியாமல் உள்ள நிலையில் இன்று இயக்குனர் விக்ரமனின் மனைவியை 25க்கும் மேற்பட்ட  மருத்துவர்களுடன் குழுவுடன் நேரில் சென்று சுகாதாரத்துறை அமைசர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்து, நல்ல சிகிச்சை அளிக்கவுள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது.