திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2024 (15:07 IST)

சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம்! தமிழக அரசு அறிவிப்பு..!

assembly
தமிழக சட்டசபை கூட்டம் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் ஏற்றப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அவர்கள், டிசம்பர் 9 தேதி சட்டசபை கூட்டம் தொடங்கும் என்று அறிவித்தார். இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில், டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தனி தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் பேங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மாநில அரசின் அனுமதி இன்றி சுரங்க உரிமை ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தும் தனி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran