புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2020 (14:39 IST)

காற்றழுத்த தாழ்வு பகுதி - 9 மாவட்டங்களுக்கு கனமழை!!

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
வங்க கடலில் நவம்பர் 23 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், அதனால் தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதனால் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியாகியுள்ளது. ஆம், நவம்பர் 23, 24 தேதிகளில் நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், பிதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.