1 + 1 ஆஃபர் போல... வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி!!
வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
கடந்த சில நாட்களாக சொல்லப்பட்டு வந்தது போல அந்தமானை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் அக்.14 வர மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
இந்நிலையில் வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அக்.14 தேதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.