1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (15:01 IST)

பள்ளிகளில் தமிழ் பாடவேளை குறைப்பு: பெற்றோர் அதிருப்தி!

Books
பள்ளிகளில் தற்போது வாரத்திற்கு 7 தமிழ் பாடவேளை உள்ள நிலையில் அது 6 ஆக குறைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழ் பாடவேளை  குறைக்கப்பட்டுள்ளது
 
வாரத்திற்கு 7 தமிழ் பாடவேளை எடுக்கப்பட்டு வரும் நிலையில் அது 6ஆக குறைக்கப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
 
அதேபோல் ஆங்கில பாடவேளையும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடவேளை குறைக்கப்பட்டதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது