செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 8 ஜூன் 2018 (18:49 IST)

தாம்பரம் - நெல்லை முன்பதிவில்லாத ரெயில் தொடக்கம்

தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு முழுவதுமாக முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட அந்த்யோதயா ரெயில் தொடங்கப்பட்டுள்ளது.

 
தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு முழுவதுமாக முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட அந்த்யோதயா ரெயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்றனர். 
 
16 முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் உள்ளது. இன்று 5.30 மணிக்கு புறப்பட்ட ரெயில் நாளைமுதல் நள்ளிரவு 12.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக செல்லும் ரெயில் மாலை 3.30 மணியளவில் நெல்லை சென்றடையும். 
 
மேலும், திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் ரெயில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.