செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (11:55 IST)

டி-23 புலியை கொல்ல மாட்டோம், உயிருடன் பிடிக்கத்தான் முயற்சி: வன அதிகாரி பேட்டி!

நான்கு மனிதர்கள் மற்றும் 30 கால்நடைகளை கொன்று குவித்த டி20 என்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவிடவில்லை என்றும் அந்த புலியை உயிருடன் பிடிக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார் 
 
கூடலூர் அருகே ஆட்கொல்லி புலி என்று கூறப்படும் டி20 புலியின் கடந்த சில  நாட்களில் நான்கு மனிதர்கள் மற்றும் 30 கால்நடைகளை இறையாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அந்த புலியை சுட்டு பிடிக்க வனத்துறை அதிகாரி உத்தரவிட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து முதன்மை வன அதிகாரி ஜெயக்குமார் நீரஜ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்
 
டி20 புலியை எக்காரணம் கொண்டும் சுட்டுக் கொல்லப்படாது என்றும் உயிருடன் பிடிக்க தீவிர முயற்சி நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிப்பிபாறை நாய், கும்கி யானைகள், ட்ரோன்கள் உள்ளிட்டவை மூலம் இந்த புலியை பிடிக்க தீவிர முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.