சுவாதி கொலை வழக்கில் புதிய திருப்பம்: பிலால் மாலிக் உள்பட 6 பேரிடம் ரகசிய வாக்குமூலம்
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ராம்குமார் தான் சுவாதியை கொலை செய்தார் என்பதை நிரூபிக்க காவல்துறை போதுமான ஆதரங்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் பிலால் மாலிக், சுவாதியின் தோழி உள்பட 6 பேர் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் பிலால் மாலிக் முக்கிய சாட்சியாக கருதப்படுகிறார். இவர் போலீசாரின் தீவிர விசாரணை வளையத்தில் உள்ளார். இந்நிலையில் நாளை நீதிமன்ற விசாரணையின் போது இந்த சாட்சியங்கள் பிறழ் சாட்சியாக கூடாது என்பதற்காக இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் வாங்கப்பட்டது.
இந்த வாக்குமூலத்தில் சுவாதியின் கொலையாளி ராம்குமாரை பிலாலுக்கு ஏற்கனவே தெரியும் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் கூறப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.