1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 4 பிப்ரவரி 2019 (17:41 IST)

’இன்னும் கொஞ்ச நாள் தானே...' டுவிட்டரில் தமிழிசையை கலாய்த்த எஸ்.வி சேகர்...

சமீபகாலமாக தமிழக பாஜக தலைவருக்கும், பாஜக முக்கிய பிரமுகரும் அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை கூறி வருபவருமான நடிகர் எஸ்வி.சேகருக்கும் மோதல் போக்கு நிலவுவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தன் டுவிட்டர் பக்கத்தில் தற்போது பாஜக தலைவர் தமிழிசையை விமர்சிக்கும் விதமாக எஸ்வி.சேகர் ஒரு டுவிட் பதிவிட்டிருந்தார். அதில் சமீபகாலமாக பாஜக தலைமை அலுவலகத்தில் தன்னை அழைப்பதில்லை என்று அண்மையில் புகார் தெரிவித்திருந்தார்.
 
இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் தமிழைசையிடம், செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது அவர் பதிலேதும் கூறாமல் தவிர்த்துவிட்டார்.
 
இந்நிலையில் எஸ்வி.சேகரின் ஆதரவாளர் ஒருவர் எஸ்வி, சேகரிடம் டிவிட்டரரில் இதுகுறித்து கேட்டிருந்தார். அதற்கு பதில் டுவிட் செய்திருந்த எஸ்.வி சேகர் பரவாயில்லை விடுங்க... இன்னும் கொஞ்ச நாள் தானே என பதிவிட்டிருந்தார்.
அதாவது பாஜக தலைவர் தமிழிசையின் பதவி இன்னும் கொஞ்ச நாள்தான் என்று மறைமுகமாக அவர் டுவிட் செய்திருப்பதாகவும் பேச்சு எழுக்கிறது.
 
ஆனால் இதுபற்றி தமிழிசை எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.