என்னை எதிர்த்து போட்டியிட்டு சீமான் டெபாசிட் வாங்கட்டும் பார்க்கலாம்: திருச்சி சூர்யா சிவா
எங்கள் தலைவர் அண்ணாமலையை நோக்கி சவால் விடும் நாம் தமிழர் கட்சியின் சீமான் என்னை எதிர்த்து ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் வாங்கி காட்டட்டும் பார்க்கலாம் என்று பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி சூர்யா சிவா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
234 தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் சீமான் வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியவில்லை என்றும் கமல்ஹாசனை டெபாசிட் வாங்க முடியாதவர் என்று கேலி செய்பவர்கள் சீமானை யாரும் கூறுவதில்லை என்றும் அந்த அளவுக்கு அவர் தன்னை ஒரு பெரிய தலைவராக பில்டப் செய்து வைத்துள்ளார் என்றும் திருச்சி சூர்யா சிவா தெரிவித்துள்ளார்.
மேலும் அண்ணாமலையை நோக்கி சவால் விடும் அளவுக்கு அவர் தரமானவர் அல்ல என்றும் 234 தொகுதிகளில் எந்த தொகுதியை வேண்டுமானாலும் சீமான் தேர்வு செய்யட்டும் அந்த தொகுதியில் என்னை எதிர்த்து அவர் போட்டியிட்டு டெபாசிட் வாங்கி காட்டட்டும் அதன் பிறகு அவர் பேசலாம் என்றும் சூர்யா சிவா தெரிவித்துள்ளார்.
இந்த சவாலை சீமான் ஏற்றுக் கொள்வாரா அல்லது பதிலடி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Siva