புகையிலை பொருட்களுக்கு தடை: அரசாணை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி..!
குட்கா பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக நடமாடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் குட்கா பான் மசாலா மற்றும் இதர புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனை அடுத்து இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது . இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று புதிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குட்கா பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து புதிய அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
இதனை அடுத்து தமிழ்நாடு அரசு விரைவில் இது குறித்த அரசாணையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran