ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2024 (15:44 IST)

ஆசி வாங்க வந்த 3 பாஜக வேட்பாளர்கள்.. வேண்டாம் என மறுத்த உச்ச நட்சத்திரம்?

சென்னையில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரத்தை நேரில் சந்தித்து ஆசி பெற விரும்பியதாகவும் ஆனால் அந்த உச்ச நட்சத்திரம் வேண்டாம் என்று மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் நேரம் வந்துவிட்டாலே திரை உலக பிரபலங்களை சந்தித்து அவர்களுடைய ஆதரவை பெறுவது வேட்பாளர்களின் ஒரு தந்திரமாக உள்ளது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சென்னையில் போட்டியிடும் மூன்று பாஜக வேட்பாளர்களும் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரத்தை சந்தித்து ஆசி பெற விரும்பியதாக கூறப்படுகிறது

ஆனால் அவர்கள் மூவருக்கும் அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்க மறுத்த அந்த உச்ச நட்சத்திரம் டெல்லியில் முறையிட்டு இந்த நேரத்தில் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

இதனை அடுத்து டெல்லி தலைமை அந்த மூன்று வேட்பாளர்களிடம் அவரே அரசியல் வேண்டாம் என்று இருக்கிறார், அவரை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள், நீங்கள் ஒழுங்காக களப்பணி செய்யுங்கள் வெற்றி பெறலாம் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது

மேலும் அந்த உச்ச நட்சத்திரம் இந்த முறை யாருக்கு ஓட்டு என்று வாய்ஸ் கொடுக்கவும் முடியாது என்று சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva