தமிழகத்தில் சன் உதித்து சண்டே லீவ் போச்சே... !!
கொரோனா நிவாரண நிதியுதவிக்கான டோக்கன் வரும் ஞாயிற்றுக் கிழமையும் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் அளிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான டோக்கன்களை ரேசன் கடை பணியாளர்களே நேரடியாக அட்டைதாரர்கள் வீட்டில் வழங்க உள்ளனர்.
அதில் பணம் பெறுவதற்கான நேரம், காலம் குறிப்பிடப்பட்டிருக்கும். மே 15 முதல் டோக்கனுக்கு நிவாரணம் வழங்கும் பணி தொடங்க உள்ள நிலையில் ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் நிவாரண தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடயே, கொரோனா நிவாரண நிதியுதவிக்கான டோக்கன் வரும் ஞாயிற்றுக் கிழமையும் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் 16 ஆம் தேதி டோக்கன் வழங்குவதற்காக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.