திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 4 மே 2021 (23:49 IST)

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கோடை மழை- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:  தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டதால், கடலோர மாவடங்களில்  வெப்ப நிலை அதிகரிக்கும். மேலும் கோடை காலத்தில் மக்களை வாட்டி வதக்கும் அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

எனவே இன்றிலிருந்து சுமார் 25 நாட்களுக்கு அக்னி வெயில் வாட்டி எடுக்கும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கோடை மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.