கோரிக்கை ஏற்பு: முன்கூட்டியே விடுதலையாகிறாரா சுதாகரன்?
கோரிக்கை ஏற்பு: முன்கூட்டியே விடுதலையாகிறாரா சுதாகரன்?
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சிறையில் இருக்கும் சுதாகரன் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தன்னை முன்கூட்டியே சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் சுதாகரன் கோரிய மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதை அடுத்து அவர் விரைவில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது ஏற்கனவே 92 நாட்கள் சிறையில் இருந்ததை சுதாகரன் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் சுட்டிக்காட்டியதை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது
எனவே நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சுதாகரன் எந்த நேரத்திலும் விடுதலையாக வாய்ப்பு என்று கூறப்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது