வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : சனி, 2 நவம்பர் 2024 (08:43 IST)

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: திடீர் வெள்ளத்தால் கோவிலுக்கு சென்றவர்கள் தவிப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலையில் திடீரென கனமழை பெய்ததால், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டத்தில் உள்ள ராக்காச்சி அம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் தவித்து வருவதாகவும், பெண்கள் உள்பட சுமார் 150 பக்தர்கள் சிக்கித் தவித்த நிலையில் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ராக்காச்சி அம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கிய தகவல் அறிந்ததும், ராஜபாளையம் தீயணைப்பு படையினர் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டதாகவும், அனைத்து பக்தர்களையும் பாதுகாப்பாக மீட்டதாகவும் கூறப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ராசாத்தி அம்மன் கோவிலுக்கு விடுமுறை காரணமாக வழக்கத்தை விட அதிக கூட்டம் இருந்தது. ஆனால் திடீரென பெய்த மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து திடீரென வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva