செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J. Durai
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2023 (12:48 IST)

பட்டாசுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

புதுக்கோட்டை விஸ்வதாஸ் நகரில் மூர்த்தி என்பவர் நாட்டு பட்டாசுகள் தயாரிக்கும் வாணப் பட்டறை வைத்துள்ளார் இவர் அரசின் உரிமம் பெற்று கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இதனை செய்து வருகிறார்.


இங்கு கோவில் திருவிழாக்கள் மற்றும்  திருமணம் காலங்களில் விற்பனை செய்வதற்காக வாண வேடிக்கை பட்டாசுகள் தயார் செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் கடையின் உரிமையாளர் மூர்த்தி என்பவர் பணிகளை தொடங்கியுள்ளார் இங்கு பணியாற்றும் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வர காலதாமதம் ஏற்பட்டதால் தானே பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது திடீரென்று பட்டறையில் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறின. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் . இரண்டு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பட்டாக வெடி தயாரிக்கும் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தை தண்ணீரை பீச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வெடி விபத்தில் அங்கு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பட்டரின் உரிமையாளர் மூர்த்திக்கு பலத்த காயம் அடைந்தார்  உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக திருக்கோகர்ணம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வெடி பட்டறையில் பணியாற்றும் தொழிலாளர் வர காலதாமதம் ஆனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.