வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2023 (18:51 IST)

மளிகைக் கடைக்காரரின் பில் போல பட்ஜெட் உள்ளது: பாஜக பிரபலம் கிண்டல்..!

wd budget
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டை பாஜகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் புகழ்ந்து வரும் நிலையில் பாஜக பிரபலம் ஒருவர் இந்த பட்ஜெட் மளிகை கடைக்காரரின் பில் போல உள்ளது என கிண்டல் செய்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாஜக பிரபலம் சுப்ரமணியன் சுவாமி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கூறுகையில், ‘இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மளிகை கடைக்காரரின் பில் போல் உள்ளது. உண்மையான நேர்மையான குறிக்கோள்கள் குறித்து வெளிப்படுத்துவதே சிறந்த பட்ஜெட் என்று கூறியுள்ளார்
 
பாஜக அரசின் பட்ஜெட்டை பாஜகவின் பிரபலமே கேலி செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran