திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2016 (13:06 IST)

திருமணமான எஸ்.ஐ.யிடம் ஏமாற்றம் அடைந்த பெண் போலீஸ் தற்கொலை: வைரலாக பரவும் இருவரின் உரையாடல் ஆடியோ

திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பெண் போலீஸ் ராமு என்பவரை காதலித்து ஏமாற்றியதால், ராமு தற்கொலை செய்து கொண்டார். ராமு தற்கொலைக்கு முன் இருவரும் போனில் பேசிய ஆடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.


 

 
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பொட்டல் அழகப்புரத்தை சேர்ந்த ராமு(23), அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றினார்.
 
இவர் சீதபற்பநல்லூரில் பணியாற்றியபோது டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஏட்டுவாக பணியாற்றிய அருமைநாயகத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அருமைநாயகத்துக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது. ஆனால் அதை மறைத்து அவர் ராமுவுடன் நெருக்கமாக பழகியுள்ளார்.
 
பின்னர் சிறிது நாட்களில் அருமைநாயகம் எஸ்.ஐ.யாக பதவி உயர்வு பெற்று பயிற்சி பெற சென்னை சென்றுள்ளார். ராமு அதன்பின் அம்சாசமுத்திரத்துக்கு மாற்றப்பட்டார். அப்போது ராமு தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு அருமைநாயகத்திடம் தொடர்ந்து கூறி வந்துள்ளார்.
 
ஆனால் அவர் அதை நிராகரித்து வந்துள்ளார். இதனால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அருமைநாயகம் ராமுவை புகார் பதிவு செய்ய வேண்டாம் என்று சமாதானப்படுத்தினார். அதன்பின்னர் அருமைநாயகம் ராமுவை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
 
இதனால் ராமு மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஆம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அருமைநாயகம் மீது புகார் பதிவு செய்யப்பட்டது.
 
ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் விரத்தி அடைந்த ராமு விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். ராமுவின் உறவினர்கள் அருமைநாயகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 5 நாட்களுக்கு மேல் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
 
அதன்பின் கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் அருமைநாயகம் மீது வழக்கு பதிவு செய்து இன்று அவரை கைது செய்தனர்.
 
மேலும் ராமு, முதன்முறையாக அருமைநாயகம் மீது புகார் அளித்தபோது, அருமைநாயகம், ராமுவை தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு கெஞ்சிய ஆடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

 
நன்றி: News18 Tamilnadu