புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2019 (13:48 IST)

விடுமுறைக்கு வீட்டுக்கு சென்ற காவலர் – கணப்பொழுதில் நடந்த சோகம் !

கேரளாவில் பணிபுரிந்த தமிழகத்தைச் சேர்ந்த போலீஸ் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்துக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பகுதியை சேர்ந்தவர் அருளப்பன். இவர் கேரளாவில் சிஆர்பிஎஃப் பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு நேற்று முன் தினம் அவர் தன் சொந்த ஊருக்கு பேருந்தில் புறப்பட்டுள்ளார். அப்போது பாதிவழியில் அவர் வந்த பேருந்தின் மீது வைக்கோல் ஏற்றிவந்த டெம்போ ஒன்று மோத, அது சம்மந்தமாக பேருந்து ஓட்டுனருக்கும் டெம்போ ஓட்டுனருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது.

இதைப் பார்த்த அருளப்பன் பேருந்தில் இருந்து  கீழே இறங்கி சென்று இரு ஓட்டுனர்களையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் வந்த டெம்போ ஒன்று சாலையில் நின்றவர்கள் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அருளப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் காயம்ப்ட்ட சிலர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அறிந்த அருளப்பனின் குடும்பத்தினர் பேரதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.