ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 7 ஜூலை 2024 (14:07 IST)

சிபிஎஸ்இ நியனமன தேர்வில் இந்தித் திணிப்பு.. மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்..!

சிபிஎஸ்இ நியனமனத் தேர்வில் இந்தித் திணிப்பு. இந்தி பேசாத மாநில தேர்வர்களுக்கு அநீதி இழைக்கிற மற்றும் சம தள ஆடுகளத்தை மறுக்கும் தேர்வு முறையை மாற்ற வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எம்.பி., சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
 
சிபிஎஸ்இ 08.03.2024 அன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி பிரிவு ஏ,பி,சி பணியிடங்கள் 118 க்கான நியமனத் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதில் இந்தி மொழி தேர்வும் இடம் பெற்றுள்ளது. அதனால் இந்தி பேசாத மாநிலங்களை சார்ந்த தேர்வர்கள் குறைந்தபட்சம் 10% முதற்கட்ட தேர்விலேயே இழந்து இரண்டாம் கட்ட தேர்வுக்கு அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பறி கொடுப்பார்கள்.
 
பிரிவு ஏ உதவி செயலாளர் (நிர்வாகம்) பதவிகளுக்கான முதற்கட்ட தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி மொழி தேர்வுக்கு 30 மதிப்பெண்கள், பிரிவு பி இளநிலைப் பொறியாளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி மொழி தேர்வுக்கு 15 மதிப்பெண்கள். பிரிவு பி இளநிலை மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி மற்றும் ஆங்கில மொழி தேர்வுக்கு 200 மதிப்பெண்கள்,  பிரிவு சி கணக்காளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி & ஆங்கில மொழித் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள், பிரிவு சி இளநிலை கணக்காளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 240 இல் இந்தி மற்றும் ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் தொடர்பான தேர்வுக்கு 40 மதிப்பெண்கள்,  இது இந்தியாவின் மொழி பன்மைத்துவத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது.
 
இந்தி பேசாத மாநில தேர்வர்களுக்கு அநீதி இழைக்கிற மற்றும் சம தள ஆடுகளத்தை மறுக்கிற தேர்வு முறைமையை மாற்றக்கோரி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
 
Edited by Siva