ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 6 ஜூலை 2024 (18:19 IST)

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

உலகக் கோப்பை தொடர் முடிந்த நிலையில் தற்போது இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. உள்ளது. இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரரான சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில், முதலில் பந்துவீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது.

இந்திய அணி பவுலர் ரவி பிஷ்னோய் மிகச்சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை சாய்த்தார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களும்,  முகேஷ்குமார் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஜிம்பாப்வே அணியில் க்ளைவ் மடாண்டே அதிகபட்சமாக 29 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில்  9 விக்கெட்களை இழந்து 115 ரன்கள் சேர்த்துள்ளது.