வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2024 (15:09 IST)

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளைமுதல் மாற்றம்: முழு அட்டவணை இதோ..!

Chennai electric train
சென்னை புறநகர் ரயில் சேவை அட்டவணை மாற்றப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்த அறிவிப்பை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.
 
பராமரிப்பு மற்றும் பல்வேறு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நாளை முதல் அதாவது நவம்பர் 22 முதல் 14 மின்சார ரயில்கள் இருவழி தடத்திலும் ரத்து செய்யப்படுகிறது.
 
அதேபோல் வார நாட்களில் அதாவது திங்கள் முதல் சனி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் மின்சார ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
 
மேலும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை  செங்கல்பட்டு - தாம்பரம்  - சென்னை கடற்கரை வரை இயங்கும் மின்சார ரயில்களின் அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
சென்னை புறநகர் ரயில் சேவை மாற்றம் குறித்த முழு அட்டவணை இதோ..!