Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை டவுன் சாப்டர் பள்ளி விபத்து: பள்ளி மாணவர்கள் போராட்டம்!

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (14:08 IST)
நெல்லை டவுன் சாப்டர் பள்ளி விபத்தை கண்டித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 
நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் திடீரென கழிவறை சுவர் இடிந்து மாணவர்கள் பலியாகியதால் சுற்றி பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்,  காவல்துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விபத்து நடந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சஞ்சய், விஸ்வரஞ்சன் ஆகிய இருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் மேலும், ஒரு மாணவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது. இந்த சம்பவத்தை கண்டித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

எல்லாம் காட்டு

அமெரிக்க பல்கலைக்கு 20 மில்லியன் டாலர் நன்கொடை கொடுத்த இந்திய தம்பதி.. இந்திய பல்கலைக்கு அளித்திருக்கலாமோ?

இனி 5 கோடி ரூபாய் வரை சொத்து வாங்குவது ரொம்ப ஈஸி.. தவெக அரசின் அதிரடி உத்தரவு...

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!...

என்கிட்ட சாரி கேட்டீங்களே!.. மறந்து போச்சா விஜய்?!.. ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ...

மதுராந்தகம் தொகுதிக்கு பரந்தாமன் சரியான வேட்பாளர் தானா? திமுக தொண்டர்களே அதிருப்தி?

அடுத்த கட்டுரையில்
Show comments