கல்விக் கட்டண கட்ட முடியாததால் தூக்கில் தொங்கிய மாணவி!
சென்னை புழல் லிங்கம் தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணன். இவரது மகள் (17) தபால்பெட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இவர் ரூ.7 ஆயிரம் கட்டணத்தைச் செலுத்தாமல் இருந்த நிலையில், தந்தை கிருஷ்ணாவிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். ஆனால் கிருஷ்ணனால் ரூ. 7 ஆயிரம் பணம் கட்டமுடியவில்லை எனத் தெரிகிறது.
இந் நிலையில், இன்று பிளஸ் 2 மாணவிகள் பொதுத்தேர்வு எழுதத் தயாராகினர். மாணவி நன்றாகப் படிப்பதால், அவருக்கு ஹால் டிக்கெட் வழங்கி தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பணத்தைக் கட்டிவிடலாம் என மாணவியின் தந்தை கிருஷ்ணா கூறியுள்ளார். ஆனால் கட்ட முடியவில்லை இதனால் மாணவி பிருந்தா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.