1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 17 நவம்பர் 2023 (14:20 IST)

பூஜைக்கு சென்ற பெண்கள் மீது கல்வீச்சு: மசூதியில் இருந்து வீசப்பட்டதாக தகவல்..!

ஹரியானா மாநிலத்தில் பூஜைக்கு சென்ற பெண்கள் மீது மசூதியில் இருந்து மர்ம நபர்கள் கல் வீசியதாக கூறப்படுவது பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஹரியானா மாநிலத்தில் நூவில் என்ற பகுதியில் சில பெண்கள் பூஜைக்கு சென்று கொண்டிருந்தபோது மசூதியில் இருந்து மர்ம நபர்கள் சிலர் கற்களை பேசியதாக கூறப்படுகிறது. இதில் சில பெண்கள் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் படையுடன் சென்ற எஸ்பி, பொதுமக்களை சமாதானப்படுத்தியதாகவும் மசூதி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
முதல் கட்ட விசாரணையில் மசூதியில் இருந்து சிறுவர்கள் சிலர் பூஜைக்கு செல்லும் பெண்கள் மீது கல் வீசியதாக கூறப்படுகிறது. அந்த சிறுவர்களிடம் நாங்கள் விசாரிக்கிறோம் என மசூதி நிர்வாகிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva