1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 15 நவம்பர் 2023 (18:04 IST)

திருச்செந்தூர் கடற்கரையில் மணலில் சிவலிங்கம்.. பசுமை சித்தர் தலைமையில் பூஜை..!

திருச்செந்தூர் கடற்கரையில் 5 அடி உயரத்தில் மணலால் சிவலிங்கம் செய்து பூஜை செய்யப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும் நாடு முழுவதும் பருவமழை பெய்ய வேண்டும் என்பதற்காகவும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும் திருச்செந்தூரில் உள்ள கடற்கரை மணலில் தீர்த்த மலையைச் சேர்ந்த பசுமை சித்தர் 5 அடி உயரத்தில் மணலால் சிவலிங்கம் செய்தார். 
 
அதன் பின்னர் அவர் சிவ பூஜை செய்தார். இந்த பூஜையில் பல பக்தர்கள் கலந்து கொண்டனர்.  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் 5 அடி உயரத்தில் மணலால் சிவலிங்கம் செய்து பூஜை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் பலர் அந்த பகுதிக்கு சென்று  புகைப்படம் எடுத்தனர் என்பதும் மணலால் செய்த சிவலிங்கத்தை வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran