வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 24 ஜூலை 2019 (20:15 IST)

பிரேக் பிடிக்காமல் சென்ற அரசுப் பேருந்து : கற்களை போட்டு நிறுத்திய மக்கள்!

திண்டுக்கல் மாவட்டம் அருகே சென்ற அரசுப் பேருந்து ஒன்று சாலையில் பிரேக் பிடிக்காமல் சென்றது. இந்நிலையில் அங்குள்ள கற்களைப் போட்டு பேருந்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து சென்ற அரசுப் பேருந்து ஒன்று, சிலுக்குவார் பட்டியை நோக்கிப் புறப்பட்டபோது, பேகம்புர் அருகே அது சென்று கொண்டிருந்தது. 
 
அப்போது அடுத்த ஸ்டாப்பில் நிறுத்த ஓட்டுநர் பிரேக்கை பிடித்தார். ஆனால் பேருந்து நிற்கவில்லை. பேருந்தில் தீடீரென்று பிரேக் பிடிக்காததால்,,ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் பேருந்தை நிறுத்த உதவுமாறு அப்பகுதி மக்களிடம் கூக்குரலிட்டனர்.
 
இதனால் பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பேகம்பூர் மக்கள் சாலையில் கற்களையும், மரக்கட்டைகளையும் போட்டு பேருந்தை நிறுத்தினர்.
 
இதனையடுத்து பிரேக செயலிழந்த அரசுப்பேருந்து திண்டுக்கல் பணிமனையில் நிறுத்தப்பட்டது. அதற்கு மாற்றாக வேறு ஒரு பேருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.