செவ்வாய், 18 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 18 மார்ச் 2025 (09:56 IST)

டெலிவரி ஊழியர் மீது சிந்திய தேநீர்! ஸ்டார்பக்ஸ் ரூ.430 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

Starbucks

ஒழுங்காக பார்சல் செய்யப்படாத தேநீர் டெலிவரி ஊழியர் மீது ஊற்றிய வழக்கில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அமெரிக்காவில் புகழ்பெற்ற தேநீர் ரெஸ்டாரண்ட் நிறுவனமான ஸ்டார்பக்ஸ் உலகம் முழுவதும் தங்களது கிளைகளை அமைத்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டார்பக்ஸ் விற்பனையகத்தில் இருந்து வாடிக்கையாளருக்கு தேநீர் ஆர்டரை பெறுவதற்காக டெலிவரி ஊழியர் மைக்கெல் கார்சியா வந்துள்ளார். அந்த கடையில் பணிபுரிந்த ஊழியர் தேநீர் பார்சலை சரியாக பேக்கிங் செய்யாமல் கொடுத்துள்ளார்.

 

அது தெரியாமல் பார்சலை வாங்கி மடியில் வைத்துக் கொண்டு மைக்கெல் சென்றபோது திடீரென பார்சல் பிரிந்து சூடான தேநீர் அவரது கால் தொடைப்பகுதிகள், அந்தரங்க உறுப்பில் பட்டதால் அப்பகுதிகள் வெந்து போனது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தோல் மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல சிகிச்சைகளை எடுத்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பளித்த நீதிபதிகள் மைக்கெலுக்கு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் 50 மில்லியன் டாலர்கள் (ரூபாயில் 433 கோடி தோராயமாக) இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K