1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (17:06 IST)

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

Annamalai Stalin
தமிழக முதல்வர் ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம் என்ற பதிவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவு செய்துள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் சுற்றுப்பயணம் செய்த போது இருட்டுக்கடை அல்வா கடைக்கு சென்று அல்வாவை ருசித்து சாப்பிட்டார். அதன் பிறகு அவர் திருநெல்வேலி அல்வாவை விட மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வா தான் பேமஸ் என்று கூறியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
 
திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க விட்டுவிட்டு, இண்டியா கூட்டணிக் கூட்டத்தில் சமோசா சாப்பிட டில்லி வரை சென்றீர்களே. அது நினைவில்லையா?
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் சென்று, உங்கள் டிராமா மாடல் அரசின் பொய்களைப் பரப்ப வெட்கமாக இல்லையா?
 
*கல்விக்கடன் தள்ளுபடி
 
*பயிர்க்கடன் தள்ளுபடி
 
*5 சவரன் வரையிலான நகைக்கடன் முழுமையாக தள்ளுபடி
 
*சிலிண்டர் ரூ.100 மானியம்
 
*டீசல் விலை ரூ.4 குறைப்பு
 
*மாதம் ஒருமுறை மின்கட்டணம்
 
*100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக்குவோம்
 
*நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2500
 
*கரும்பு ஆதரவு விலை டன்னுக்கு ரூ.4000
 
*அரசு துறைகளில் புதிதாக 2,00,000 பணியிடங்கள்
 
*காலியாக உள்ள 3,50,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்
 
*பழைய ஓய்வூதிய திட்டம்
 
இவ்வாறு அண்ணாமலை பட்டியலிட்டு, விமர்சித்துள்ளார்.

Edited by Mahendran