வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 8 ஜூலை 2019 (13:44 IST)

நீட் விவகாரம்: ”மத்திய அரசின் தீர்மானத்தை எதிர்த்து தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்”…ஸ்டாலின் அதிரடி

நீட் விவகாரம்: ”மத்திய அரசின் தீர்மானத்தை எதிர்த்து தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்”…ஸ்டாலின் அதிரடி

நீட் மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற ஸ்டாலினின் கோரிக்கை தற்போது தற்போது தமிழக அரசு நிராகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு, அமலாக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட  பல பிராந்திய கட்சிகள், கண்டனங்களை தெரிவித்து வந்தது.

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நீட் தேர்வு மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்தன.

இந்த நடவடிக்கையை தமிழக அரசியல் கட்சிகள் தற்போது கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது மு.க.ஸ்டாலின், மத்திய அரசு நீட் மசோதாக்களை நிராகரித்தது குறித்து கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.

நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், நீட் தேர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற கூடிய மத்திய அரசு, தற்போது அந்த தீர்மானத்தையே நீர்த்து போகச் செய்துள்ளது எனவும் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் பேசினார்.

இதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், நீட் மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசைக் கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரமுடியாது என கூறினார்.

இதன் பின்பு மீண்டும் பேச ஆரம்பித்த மு.க.ஸ்டாலின், மத்திய அரசைக் கண்டித்து திர்மானம் போடவில்லை என்றால், மத்திய அரசை வலியுறுத்தியாவது தீர்மானம் போடுங்கள் என கேட்டுகொண்டார்.

பின்னர் இதற்கு பதிலளிக்கும் விதமாக ஓ.பி.எஸ், நீட் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி பரீசீலித்து முடிவு செய்யப்படும் என்றார்.

இந்த விவாதத்தால் சட்டப் பேரவையில் இன்று லேசாக விவாத போர்கள் ஏற்பட்டன. அதன் பின்பு முதல்வர் பழனிசாமி, சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

எனினும் திமுக-வினர் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் ஒன்று போலவே தமிழகத்திற்கு துரோகம் செய்கின்றனர் என்று குற்றம் சாட்டிவருவது குறிப்பிடத்தக்கது.