புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 17 பிப்ரவரி 2021 (16:37 IST)

பாமக, தேமுதிக கூட்டணிக்கு வர வாய்ப்பிருக்கிறதா? திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு!

திமுக தலைவர் ஸ்டாலின் பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணிக்கு வருவதில் ஏதேனும் தயக்கம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணிகள் அமைந்துள்ளன. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் ஆகியக் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் கூட்டணி தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த திமுக தலைவர் ஸ்டாலின் ‘பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணிக்கு வருவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் ஏற்கனவே இருக்கும் கூட்டணிகளோடு பயணிக்க விரும்புகிறேன். அவர்களும் எங்களிடம் பேசவில்லை. நாங்களும் அவர்களிடம் கேட்கவில்லை. அது தேவையும் இல்லை.’ எனக் கூறியுள்ளார்.