1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (20:40 IST)

கொலை நடந்த இரண்டு நாட்களுக்கு பின் வாயை திறக்கும் தமிழ்ப்போராளிகள்

மதமாற்றத்தை கண்டித்த காரணத்தால் பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியிருந்த நிலையில் இந்த கொலையை கண்டித்து எந்தவொரு பெரிய கட்சியும் குறைந்தபட்சம் ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை. இதனால் நெட்டிசன்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளான நிலையில் தற்போதுதான் வாயை திறக்க ஆரம்பித்துள்ளனர்.
 
இந்த கொலை குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியபோது, 'ராமலிங்கம் கொலையின் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து உடனே கைது செய்யவேண்டும். வன்முறை என்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல; ஒரு உயிரைப்பறித்து அதில் சுகம் காண்பது என்பது மிகக்கொடூரமான மனநிலையாகும். எதன் பொருட்டும் இதுபோன்ற படுகொலைகளை நியாயப்படுத்தவோ, சகித்துக்கொள்ளவோ முடியாது' என்று கூறியுள்ளார்.
 
அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில், 'கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த கொலையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்! இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் நிலவும் பாரம்பரியமிக்க மதநல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க அ.தி.மு.க அரசு முன்வர வேண்டும்' என்று கூறியுள்ளார்.
 
சமூக வலைத்தளங்களின் நெட்டிசன்களின் கடும் நிமர்சனத்தில் பட்டும் படாமல் இந்த கண்டன அறிக்கைகள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.