1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 15 ஜூலை 2020 (08:45 IST)

பக்தர்கள் இல்லாமல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர்: யூடியூபில் நேரடி ஒளிபரப்பு

பக்தர்கள் இல்லாமல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர்
ஒவ்வொரு வருடமும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடி மாதம் பூரம் நட்சத்திர தினத்தில் தேரோட்டம் நடைபெறும் என்பதும் இந்த தேரோட்டத்தை அந்த பகுதியில் உள்ள ஏராளமானோர் கண்டு ரசிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மேலும் தேரோட்ட தேதியன்று விருதுநகர் மாவட்டம் முழுவதும் அரசு விடுமுறையாக அறிவிக்கபடும் என்பதும், தமிழக அரசின் சின்னமான ஆண்டால் கோவில் கோபுரம் உலக பிரசத்தி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறுமா? என்ற கேள்வி ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களிடையே எழுந்தது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நிர்வாகம் தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்து உள்ளது 
 
இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டம் வரும் 24ஆம் தேதி வழக்கம்போல் நடைபெறும் என்றும் ஆண்டாள் கோவிலில் தங்கத் தேரை இழுக்க அனுமதி உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் தேர்த தேர்த்திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தேரோட்ட காட்சி யூடியூப் வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. தேரோட்டத்தை நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் யூடியூப் வலைதளத்தில் பார்க்கலாம் என்ற மகிழ்ச்சியில் அப்பகுதி பக்தர்கள் உள்ளனர்