புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2024 (15:09 IST)

ஸ்ரீரங்கத்தின் ஸ்தல புராண நாட்டிய நாடக நிகழ்வு!

சென்னை தி நகர் கிருஷ்ணகான சபாவில்  
சுஷோபனம் அகாடமி ஆஃப் கிளாசிக்கல் ஆர்ட்ஸ் (SACA) மூலமாக 
"பூலோக வைகுண்டம்- அரங்கனின் ஸ்ரீரங்கம்"
 என்ற தலைப்பில்  ஸ்ரீரங்க  ஸ்தல புராணத்தை கருப்பொருளாகக் கொண்டு நாட்டிய நாடகம் நடைபெற்றது.
 
திரைப்பட நடிகை, நடனக் கலைஞர் டாக்டர் சோபனாவின்  மாணவியான சீதாலட்சுமி விஜய் அவர்கள் தனது மாணவிகளுடன் இந்த  நாட்டிய நாடகத்தை உருவாக்கி மேடை ஏற்றினார்.
 
திரைப்பட நடிகர் 
ஒய்.ஜி.மகேந்திரா தலைமை   ஏற்க, 
நடனக் கலைஞர் 
உமா சத்தியநாராயணா சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்வு 
 
தி.நகர்
கிருஷ்ணகான சபாவில் 10வது முறையாக அரங்கேறியது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அரங்கம் நிறைந்த மக்களுடன் விழா நடைபெற்றது.
 
நமது அடையாளத்தை நமது கலாச்சாரத்தை, அனைவரையும் ஈர்க்கும் விதமாக, அற்புதமான நாடகமாக, அனைத்து மக்களுக்கும் பிடிக்கும் விதமாக உருவாக்கி இருக்கிறார்கள் என்று 
ஓய்.ஜி.மகேந்திரா பாராட்டினார்.