1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (21:00 IST)

ஸ்ரீமதி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை: நீதிமன்றம் உறுதி

SRIMATHI
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார் 
 
அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் இரண்டு தடவை அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு பாலியல் பலாத்காரம் அல்லது கொலையோ காரணமில்லை என்று உறுதியாகி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது 
 
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவ குழுவின் அறிக்கையின்படி உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து ஸ்ரீமதி கொலை செய்யப்படவில்லை என்ற கோணத்தில் இந்த வழக்கு சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.