ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (10:42 IST)

தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. ஒரே மாதத்தில் 4வது முறை..!

தமிழக மீனவர்கள் மீது கடந்த சில நாட்களாக இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் ஒரே மாதத்தில் தமிழக மீனவர்கள் மீது நான்கு முறை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து மத்திய அரசு உடனடியாக மீனவர்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென இலங்கை கடற்கொள்ளையர்கள் அந்த பகுதிக்கு வந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த சம்பவம் வேதாரணியத்திற்கு தென்கிழக்கே 15 நாட்டிக்கல் தொலைவில் நடந்துள்ளதாகவும் தமிழக மீனவர்களின் வலைகளை வெட்டி எடுத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழக மீனவர்களின் வலைகள் மதிப்பு ரூபாய் 2 லட்சம் என்று வலைகளை பறிகொடுத்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே மாதத்தில் நான்காவது முறையாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளதை அடுத்து மத்திய மாநில அரசுகள் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran