வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 20 ஜூலை 2018 (19:35 IST)

அருப்புக்கோட்டை எஸ்பிகே அலுவலகத்திற்கு சீல்: வருமான வரித்துறை அதிரடி

அருப்புக்கோட்டையில் உள்ள செய்யாதுரை என்பவருக்கு சொந்தமான எஸ்பிகே நிறுவனத்தில் கடந்த ஐந்து நாட்களாக வருமான வரித்துறையினர் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுமார் ரு.170 கோடி ரொக்கமும், 100 கிலோவுக்கும் அதிகமாக தங்கமும் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது.
 
இந்த நிலையில் கடந்த 5 நாட்கள் நடந்த சோதனையில் பறிமுதல் செய்த ஆவணங்களை தனி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் எஸ்பிகே அலுவலகத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
 
முன்னதாக அருப்புக்கொட்டை எஸ்பிகே நிறுவனத்தில் ஒரு தலைமை அதிகாரி, 2 துணை அதிகாரிகள், 4 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் தொடர் சோதனைகள், விசாரணைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி ஒரு கிமீ தூரம் சாலை அமைக்க ரூ18 லட்சம் முதல் ரூ20 லட்சம் வரை கான்ட்ராக்டர்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்து வந்த நிலையில் செய்யாதுரையின் நிறுவனம் ஒரு கிமீ சாலை அமைக்க ரூ35 லட்சம் முதல் ரூ36 லட்சம் வரை டெண்டர் எடுத்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.