திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 29 மே 2018 (08:20 IST)

கோயம்பேடு சந்தையில் ரசாயனம் தடவிய 9 டன் பழங்கள் பறிமுதல்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உணவுத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரசாயனம் தடவி பழுக்கவைக்கப்பட்ட 9 டன் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவிலே மிகப்பெரிய சந்தையான சென்னை கோயம்பேடு சந்தையில் பழங்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவை மலிவான விலையில் கிடைப்பதால் மக்கள் பலர் பொருட்களை இங்கு வாங்குவது வழக்கம். ஆனால் இங்கு சில வியாபாரிகள் சிலர் பழங்களை கெட்டுப்போகாமல் பாதுகாக்க ரசாயனம் தடவுவதாகவும், சிலர் தரமற்ற பொருட்களை விற்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது.
 
இந்நிலையில் நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட்டில் உணவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில் 4 கடைகளில்  ரசாயனம் தடவிய 2 டன் பப்பாளிகள், 7 டன் மாம்பழம், 3 கிலோ எத்திலின் பவுடர் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
இதனையடுத்து  விதிமுறையை மீறி செயல்பட்ட நான்கு கடைகளுக்கு உணவுத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.