1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 17 நவம்பர் 2023 (10:36 IST)

கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு..!

Train
திருச்செந்தூர் உள்பட தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவையும் சூர பத்மனை முருகன் வதம் செய்யும் காட்சியையும் பார்ப்பதற்காக லட்சக்கணக்கான திருச்செந்தூரில் கூடியுள்ளனர் 
 
இந்த நிலையில் கந்த சஷ்டி திருவிழாவை ஒட்டி சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதன்படி  சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இன்று இரவு 11:55 மணிக்கு கிளம்பும் என்றும் இந்த ரயில் நாளை நண்பகல் 12:45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் மறு மார்க்கமாக நாளை இரவு 10.10 மணிக்கு திருநெல்வேலி இருந்து கிளம்பும் சிறப்பு ரயில் 19ஆம் தேதி நண்பகல் 12.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
திருச்செந்தூருக்கு கந்த சஷ்டி திருவிழாவுக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Mahendran