ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 18 ஜூலை 2019 (10:53 IST)

அத்திவரதர் பக்தர்களுக்கு ஓர் இனிய செய்தி…

அத்திவரதரின் தரிசனத்தை பெற சென்னையிலிருந்து காஞ்சிபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜுலை 1 ஆம் தேதியிலிருந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சித் தந்து வருகிறார். இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகை புரிகிறார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது, அத்திவரதரை தரிசிக்க சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதாவது, செங்கல்பட்டு- காஞ்சிபுரம் இடையே மாலை 5.30 மணிக்கும், காஞ்சிபுரம்- சென்னை கடற்கரை இடையே இரவு 7.45 மணிக்கும் இயக்கப்பட்ட சிறப்பு மின்சார ரயில் ரத்து செய்யப்படும் எனவும், அதற்கு பதிலாக செங்கல்பட்டு-கடற்கரை இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டிலிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் எனவும் கூறப்படுகிறது.