ஜூன் 21ல் கூடுகிறது சட்டமன்றம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
ஜூன் 21-ஆம் தேதி சட்டமன்றம் கூட இருப்பதாக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அவர்கள் தெரிவித்துள்ளார்
சற்று முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்ற வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார்
இந்த நிலையில் ஜூன் 21 ஆம் தேதி கவர்னர் உரையுடன் சட்டமன்ற கூட்டம் தொடங்கும் என்றும் எத்தனை நாள் கூட்டம் தொடங்கும் என்பது குறித்து ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் குழுவில் முடிவு செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் என்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் சபாநாயகர் உறுதி அளித்தார் மேலும் அனைத்து கட்சியினருக்கும் பாகுபாடு இன்றி பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்