6 வயது சிறுமியின் வீடியோ வைரல்: உடனடி நடவடிக்கை எடுத்த காஷ்மீர் கவர்னர்!
சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவர் தன்னுடைய வயதுக்கு அதிகமாக பாடச்சுமை இருப்பதாகவும் தினமும் காலை 10 மணி முதல் 2 மணி வரை தொடர்ச்சியாக பல்வேறு பாடங்கள் ஆன்லைனில் நடத்தப்படுவதாகவும் இதனால் தங்களுக்கு பெரும் சுமையாக இருப்பதாகவும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியிருந்தார்
இதனை அடுத்து ஜம்மு கஷ்மிர் கவர்னர் இதுகுறித்து அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். பள்ளி குழந்தைகளின் பாடச் சுமையை குறைக்க 48 மணி நேரத்தில் புதிய கொள்கை வகுக்கப்படும் என்று கவர்னர் தரப்பிலிருந்து உறுதி கொடுக்கப்பட்டுள்ளது
அதன்படி தொடக்க கல்வி மாணவர்களுக்கு தினமும் அரை மணி நேரமும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றரை மணி நேரமும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மணி நேரமும் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என கொள்கை வகுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன