செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 நவம்பர் 2021 (10:41 IST)

நவம்பர் 25 முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு! – ரயில்வே அறிவிப்பு!

எக்ஸ்பிரஸ் ரயில்களில் நவம்பர் 25 முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்த காரணத்தால் குறைந்த அளவிலான சிறப்பு ரயில்களே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிறப்பு ரயில்களை வழக்கமான ரயில்களாக இயக்க ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையடுத்து அடுத்த கட்டமாக நவம்பர் 25 முதல் 9 எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ், மக்களூர் – கோவை எக்ஸ்பிரஸ், இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மங்களூரு – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ், காரைக்குடி – எழும்பூர் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் – தாம்பரம் எக்ஸ்பிரஸ், சென்னை செண்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ், பாலக்காடு – நெல்லை எக்ஸ்பிரஸ், பரசுராம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவற்றில் முன்பதிவில்லா பெட்டிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.